ஷங்கர் வெளியிட்ட 2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ

ஷங்கர் வெளியிட்ட 2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ
ஷங்கர் வெளியிட்ட 2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ

2.0 திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் 2.0 படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2.0 படத்தின் விஎஃப்எக்ஸ் (VFX) உருவாக்கம் குறித்த காட்சிகளுடன் கூடிய புதிய மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார். உலகின் பிரபலமான 25 ஸ்டூடியோக்களில் 1000 கலைஞர்களால் இந்த விஎஃப்எக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மேக்கிங் வீடியோவை ரஜினி ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்தப் படம் அக்டோபர் 29-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் ரஜினியோடு, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதனை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com