ஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 !

ஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 !

ஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 !
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்துள்ளது என்று
அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளோடு கடந்த 29 ஆம் தேதி வெளியானது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு
வெளியான ‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி
ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின்
வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவ்வளவு பொருட்செலவுடன் தயாராகும் படத்தின் வசூல் என்பது, இந்திய சினிமா
மார்க்கெட்டை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கும் என பேசப்பட்டது. அதை வைத்தே பல நிறுவனங்கள் மேலும் பணத்தை
முதலீடு செய்ய முன்வருவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்தப் படம் இந்திய மதிப்பில் 500 கோடி பட்ஜெட் எனக்
கணக்கிடப்பட்டது. இந்திய அளவில் மட்டும் ‘2.0’ முதல் நாள் 100 கோடி வசூல் செய்யலாம் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில் 2.0 திரைப்படம் உலக அளவில் நான்கு நாளில் 400 கோடி வசூல் செய்தது. இப்போது ஒரே வாரத்தில் உலகம்
முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com