சீனாவில் சந்திக்கும் 1980 நட்சத்திரங்கள்..பங்கேற்பாரா ரஜினி?

சீனாவில் சந்திக்கும் 1980 நட்சத்திரங்கள்..பங்கேற்பாரா ரஜினி?

சீனாவில் சந்திக்கும் 1980 நட்சத்திரங்கள்..பங்கேற்பாரா ரஜினி?
Published on

2009 ஆண்டு முதல் 1980 காலகட்டத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ஆண்டுக்கொருமுறை சந்தித்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு அவர்கள் சீனாவில் சந்தித்து மகிழ இருக்கின்றனர். சீனாவில் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் நடிகைகள் கூட இருக்கின்றனர். 
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வெங்கடேஷ், மோகன்லால், மம்மூட்டி, பாக்யராஜ், லிஸி, மோகன், சுமன், நதியா, அம்பிகா, ரமேஷ் அரவிந்த், பிரபு, ராதிகா, குஷ்பு மற்றும் பலர் பங்கேற்பது வழக்கம். இந்தமுறை அவர்களில் சிலர் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரியவந்துள்ளது. 
இந்த ஆண்டு சீனாவில் சிரஞ்சீவி, ராதிகா, குஷ்பு, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சுகாசினி, மற்றும் லிஸி ஆகியோர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். ரஜினிகாந்த் காலா படஷூட்டிங்கில் மும்பையில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை. பாலகிருஷ்ணா தனது 101வது படப்பணிகளில் பிஸியாக இருப்பதால் அவரும் பங்கேற்கவில்லை.  வெங்கடேஷும் படப்பிடிப்பில் இருப்பதால் பங்கேற்கவில்லை.
எப்போதும் இந்தியாவில் ஓரிடத்தில் சந்தித்துக்கொள்ளும் அவர்கள் தற்போது முதன்முறையாக சீனாவில் சந்தித்துக்கொள்ள இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com