\
ரகளையில் ஈடுபட்ட விவகாரம் : விஜய் ரசிகர்கள் 18 பேர் கைது

ரகளையில் ஈடுபட்ட விவகாரம் : விஜய் ரசிகர்கள் 18 பேர் கைது

ரகளையில் ஈடுபட்ட விவகாரம் : விஜய் ரசிகர்கள் 18 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரியில் ரகளையில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக விஜய் ரசிகர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் திரைக்கு வந்தது. படம் வெளியானதற்கு முந்தைய இரவு வரை பிகில் படத்துக்கு சிறப்புக் காட்சி அனுமதி உண்டா இல்லையா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. 

இதையடுத்து, கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி 10 மணியளவில் பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அடுத்த நாள் அதிகாலை படத்தின் சிறப்புக்காட்சி வெளியிட திரையரங்கங்கள் முடிவு செய்திருந்தன. ஆனால் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே நள்ளிரவு விஜய் ரசிகர்கள் பிகில் படத்தின் சிறப்புக்காட்சியை வெளியிடக்கோரி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த பேனர்களுக்கும் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டனர். 

இதுகுறித்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டு பொது சொத்துக்களை சேதம் செய்த குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தற்போது மேலும் 18 பேரை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்து கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை விஜய் ரசிகர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com