அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘வேதாளம்’.
இப்படத்திற்கான ப்ரோமோ பாடல் அனிருத்தின் அதிரடி இசையில் ‘ஆளுமா டோலுமா’ என்ற பெயரில் கடந்த 2015 ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தற்போது இப்பாடல் 1 கோடியே 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் டுவிட்டரில் #15MViewsForAalumaDoluma என்ற ஹாஷ் டாக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.