சினிமா
பன்னிரெண்டு படங்களில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார்!
பன்னிரெண்டு படங்களில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார்!
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியிருக்கும் ஜி.வி பிரகாஷ் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக மாறியிருக்கார்.
இவர் நடிப்பில் அடுத்த மாதம் புரூஸ்லீ திரைப்படம் வெளியாகயிருக்கிறது. இதை தொடர்ந்து அடங்காதே, 4ஜி ஆகிய படங்களில் நடிக்கிறார். இது தவிர இயக்குனர் பாலா, பாண்டிராஜ், வெற்றிமாறன், ராஜிவ்மேனன் போன்ற பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார். இதை தவிர நிறைய புதுமுகங்கள் இயக்கும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் இந்திய திரையுலகிலேயே ஒரே சமயத்தில் அதிக படங்களில் நடிக்கும் நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் ஜி.வி. பிரகாஷ்குமார்.

