நடிகர் மகேஷ் பாபுக்கு 106 வயதான ரசிகை ! ஒரு நெகிழ்ச்சியூட்டும் சந்திப்பு
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை சந்திக்க அவரது ரசிகையான 106 வயது பாட்டி பல கிலோமீட்டர் பயணம் செய்து வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தெலுங்கு திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. தமிழில் விஜய் போன்று தெலுங்கில் மகேஷ் பாபு என்று சொல்வார்கள். விஜய் நடித்து வெற்றிப் பெற்ற கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீ மேக்குகள் தான். சிறுவர்கள் இளைஞர்கள் என மகேஷ் பாபுவுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆனால் அவரது ரசிகர் பட்டாளத்தில் 106 வயது பாட்டியும் ஒருவர் இருந்துள்ளார் என்பது மகேஷ் பாபு பகிர்ந்த இன்ஸ்ட்ராகிராம் பதிவில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த மூதாட்டி, சத்யவதி. 106 வயதான சத்யவதி நடிகர் மகேஷ் பாபுவின் தீவிர ரசிகை. இந்நிலையில் மகேஷ்பாபுவின் நடித்து வரும் மகரிஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதனை அறிந்த சத்யவதி தனக்கு பிடித்த நாயகனை பார்க்க பல கிலோமீட்டர் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். தனக்கு இப்படி ஒரு ரசிகை என ஆச்சரியப்பட்ட மகேஷ் பாபு தனது பரபரப்பான நேரத்திலும் அவரும் அமர்ந்து பேசி நேரத்தை செலவிட்டுள்ளார். அது குறித்த புகைப்படத்தை பகிர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.