\
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா? மறுக்கிறார் நிதி அகர்வால்!

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா? மறுக்கிறார் நிதி அகர்வால்!

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா? மறுக்கிறார் நிதி அகர்வால்!
Published on

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் நானும் நண்பர்கள்தான் என்று நடிகை நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்திப் பட இளம் நடிகை நிதி அகர்வால். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. இருவரும் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இதுபற்றி அவரிடம் கேட்டப்போது, தாங்கள் காதலிக்கவில்லை என்று மறுத்தார்.

‘எனக்கு அவரைத் தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள். உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது லண்டன் சென்றிருந்தேன். அங்கு கே.எல்.ராகுலை சந்தித்தேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும் நம் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவ்வளவுதான். நாங்கள் காதலிக்கவில்லை’ என்றார். 

கே.எல்.ராகுல், நடிகர் சுனில் ஷெட்டி மகள் அதியாவை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com