”எங்கள் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம்; தேற்றிய அனைவருக்கும் நன்றி” - வெங்கட் பிரபு

”எங்கள் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம்; தேற்றிய அனைவருக்கும் நன்றி” - வெங்கட் பிரபு

”எங்கள் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம்; தேற்றிய அனைவருக்கும் நன்றி” - வெங்கட் பிரபு
Published on

”எங்கள் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம்; தேற்றிய அனைவருக்கும் நன்றி” என தனது தாயார் இறப்பு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ”எங்கள் குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம். தம் வாழ்வின் மிக முக்கிய தருணத்தின் அலுவல்களுக்கிடையிலும் என் அன்னையின் நிறைவு நாட்களில் எங்களோடு இமயம் போல் நின்று தேவைப்பட்ட அத்தனை உதவிகளையும் செய்த நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் அம்மா மணிமேலை நேற்று உயிரிழந்தார். இதனையொட்டி, அறிக்கை வெளியிட்டுள்ள வெங்கட் பிரபு,  “எனது தந்தை கங்கை அமரன், தம்பி பிரேம்ஜி, நான் எனது குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம்.

இந்த நிலையில் எங்களை அரவணைத்து தேற்றி தோள்கொடுதுநிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். தம் வாழ்வின் மிக முக்கிய தருணத்தின் அலுவல்களுக்கிடையிலும் என் அன்னையின் நிறைவு நாட்களில் எங்களோடு இமயம் போல் நின்று வலுவூட்டி தேவைப்பட்ட அத்தனை உதவிகளையும் தக்க நேரத்தில் செய்துதந்த என் நண்பர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com