’நான் பார்த்த ஆவணப் படத்தின் பெயரை வெளியிடமாட்டேன்’ -அமிதாப் பச்சன்
ஜூலை இறுதியில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதை அடுத்து அவர் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கும் அமிதாப் வீட்டில் கண்காணிப்பில் உள்ளார். கொரோனாவுடன் போராடும்போது வாழ்க்கை மீதான அவரது கண்ணோட்டம் எப்படி இருந்தது, தனது நேரத்தை எவ்வாறு செலவிட்டார் என்பதை தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
மருத்துவமனையில் தன்னிடம் ஒரு செல்போன், சில மருந்துகள் மட்டுமே இருந்ததாக அவர் கூறியுள்ளார். சில பழைய கிரிக்கெட் தொடர்களைப் பார்த்ததாகவும். சிறிது நேரம் ஓய்வு எடுத்ததாகவும், தன்னிடம் இருந்த செல்போன் பற்றி தெரிந்துகொள்ள சிறிது நேரம் ஒதுக்கியதாகவும், நாள் இறுதியில் பிராண பயிற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு ஆவணப்படம் பார்த்ததாகவும், ஆனால் அதன் பெயரை வெளியிட மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது மகன் அபிஷேக்கும் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார்.