\
’தி டார்க் டவர்’ பாக்ஸ் ஆபிஸிஸ் முதலிடம் பிடிக்கும்

’தி டார்க் டவர்’ பாக்ஸ் ஆபிஸிஸ் முதலிடம் பிடிக்கும்

’தி டார்க் டவர்’ பாக்ஸ் ஆபிஸிஸ் முதலிடம் பிடிக்கும்
Published on

உலகமெங்கும் வெ‌ளியாகி இருக்கும் "’தி டார்க் டவர்" திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிஸ் முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் மூன்று நாட்களில் சுமார் 130 கோடி ரூபாய் வசூலாகும் என்றும் மதிப்பிடப்படுகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்துக்கு மோசமான விமர்சனமே கிடைத்திருக்கிறது. இருப்பினும் ஸ்டீபன் கிங்கின் கதைக்காக மக்கள் ‌படம் பார்க்க வருவார்கள் எனக் கருதப்படுகிறது. கடந்‌த இரு வாரங்களாக முதலிடத்தில் இருந்த கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் வரும் வாரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திகில் மற்றும் மர்ம கதைகளுக்கு பெயர் போன ஸ்டீபன் கிங்சுக்கு என்று உலகளவில் ரசிகர்கள் உள்ளதால் இப்படம் புதிய சாதனை படைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com