‘தளபதி 64’ஃபர்ஸ்ட் லுக்: ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்!

‘தளபதி 64’ஃபர்ஸ்ட் லுக்: ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்!
‘தளபதி 64’ஃபர்ஸ்ட் லுக்: ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்!

இன்று ‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ள நிலையில், #Thalapathy64FLday என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகிவருகிறது

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு வேகம் எடுத்துள்ளது. இதுவரை இரண்டு கட்டங்களுக்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ள நிலையில் சென்னையில் விஜய் பங்கேற்ற பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. மேலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக கர்நாடக மாநிலம் ஹிமோகாவில் பெரிய சிறைச்சாலை போன்று செட் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில்தான் விஜய் சேதுபதிக்கும் விஜய்க்குமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே ‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை முதலே #Thalapathy64FLday என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்கள் மூலம் பலரையும் கவர்ந்த இயக்குநர் என்பதால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் ‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com