\
பொங்கலுக்கு பின் தொடங்குகிறது விஜய் 63!

பொங்கலுக்கு பின் தொடங்குகிறது விஜய் 63!

பொங்கலுக்கு பின் தொடங்குகிறது விஜய் 63!
Published on

விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தின் ஷூட்டிங், பொங்கலுக்கு பிறகு தொடங்குகிறது.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ’சர்கார்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்துக்குப் பிறகு ஓய்வில் இருந்த விஜய், அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்- அட்லீ காம்பினேஷனில் தெறி, மெர்சல் படங்கள் ஹிட்டாகியுள்ள தால், இந்தப் படத்தையும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் விஜய் ரசிகர்கள்!

விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. விவேக், யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் பொங்கலுக்குப் பிறகு வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை, தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com