சூர்யாவின் ’சூரரைப் போற்று’ ரிலீஸ் எப்போது?

சூர்யாவின் ’சூரரைப் போற்று’ ரிலீஸ் எப்போது?

சூர்யாவின் ’சூரரைப் போற்று’ ரிலீஸ் எப்போது?
Published on

நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் ரிலீஸ் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 ‘இறுதிச்சுற்று’  படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படம், ’சூரரைப் போற்று’. சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மற்றும் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

’ஏர் டெக்கான்’ உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப்படம் தயாராகிறது. வாழ்க்கை வரலாறு படமாக இல்லாமல், அவர் செய்த நல்ல விஷயங்களை மட்டும் வைத்து படம் உருவாவதாகக் கூறப்படுகிறது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி இப்போது மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

சூர்யா, இந்தப் படத்தின் டப்பிங்கை இப்போதுதான் தொடங்கியுள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா, போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு இன்னும் அதிக நாள் தேவைப்படும் என்று கூறியுள்ளார். இதனால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com