‘சர்கார்' சர்ச்சை: விஜய், முருகதாஸூக்கு நோட்டீஸ் !
சமீபத்தில் வெளியான சர்கார் பட போஸ்டரில் உள்ள புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொது சுகாதாரத்துறை நோட்டீல் அனுப்பியுள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததால் அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. சில கட்சிகளும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என கடுமையாக எதிர்த்தன.
இந்நிலையில் புகை பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.