'சண்டக்கோழி 2' பூஜையுடன் ஆரம்பமானது

'சண்டக்கோழி 2' பூஜையுடன் ஆரம்பமானது

'சண்டக்கோழி 2' பூஜையுடன் ஆரம்பமானது
Published on

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. விஷால் - மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.6 கோடி செலவில் பிரமாண்ட செட் அமைப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com