’பத்மாவத்’படத்திற்கு குஜராத்தில் தடை: விஜய் ரூபாணி அறிவிப்பு
தீபிகா படுகோனே நடிப்பில் பெரும் சர்சையை ஏற்படுத்தியிருக்கும் பத்மாவத் திரைப்படம் குஜராத் திரையரங்குகளில் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார்.
’பத்மாவத்’ படத்திற்கு பல பக்கங்களில் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய மத்திய தணிக்கைக் குழு, படம் வெளியிடுவதற்கு தடையாக இருந்த வசனங்கள் மற்றும் சில காட்சிகளை நீக்கும்படி அறிவிவுறுத்தியதாக செய்தி வெளியானது. அதன் பின்பு, பத்மாவதி திரைப்படம் ’பத்மாவத்’என்ற பெயரில் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கும் சில முட்டுக்கட்டைகள் முளைத்துள்ளன.படம் குறித்த எதிர்பார்புகள் ரசிகர்களில் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் கூடவே படத்திற்கு தடைகளும் தலைத்தூக்கி வருகின்றன. இந்நிலையில், பத்மாவத் திரைப்படம் குஜராத் மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் திரையிடபடாது என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், படம் வெளியிடுவது குறித்து பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி பத்மாவத் திரைப்படம் குஜராத்தில் வெளியாகது என்று கூறியுள்ளார். முன்னதாக ராஜஸ்தானிலும், பத்வாத் திரைப்படம் வெளியாகது என்று அம்மாநில முதல்வர், வசுந்தரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.