ஓடிடியில் வெளியாகிறது சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பான ’Oh My Dog'

ஓடிடியில் வெளியாகிறது சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பான ’Oh My Dog'
ஓடிடியில் வெளியாகிறது சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பான ’Oh My Dog'

'ஓ மை டாக்’ திரைப்படம் வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம் போல் இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ’ஓ மை டாக்’. இந்தப் படத்தை சரோ சண்முகம் என்பவர் இயக்கியிருக்கிறார். அதேபோல் நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் மற்றும் அருண் விஜய், அவரின் தந்தை விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய இயக்குநர், ஹாலிவுட்டில் வால் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம்போன்று ’ஓ மை டாக்’ படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்ததாகவும், இதனால் சர்வதேச குழந்தகளுக்கான தரத்துடன் ஓ மை டாக் உருவாகியுள்ளது எனவும் கூறினார். இந்த கதைக்காக 7 வருடம் திரைக்கதை அமைத்ததாகப் படக்குழுவினர் கூறியுள்ளனர். அதேபோல் இந்த படத்தில் நடித்துள்ள நாய்க்கு, இரண்டு ஆண்டுகள் பயிற்சி கொடுத்து படமாக்கியதாகவும் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் தாத்தா - அப்பா - மகன் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல்முறையாகும். இது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக விழாவில் கலந்துகொண்ட அருண் விஜய் தெரிவித்தார். இதனால் ’ஓ மை காட்’ குழந்தைகளை நிச்சயம் கவரும் எனவும் கூறினார். இந்த திரைப்படம் வரும் 21ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com