\
டாக்குமெண்டரியாக வெளியாகும் ”நயன்தாரா-விக்னேஷ் சிவன்” திருமணம் - நெட்ஃப்ளிக்ஸ் அறிவிப்பு

டாக்குமெண்டரியாக வெளியாகும் ”நயன்தாரா-விக்னேஷ் சிவன்” திருமணம் - நெட்ஃப்ளிக்ஸ் அறிவிப்பு

டாக்குமெண்டரியாக வெளியாகும் ”நயன்தாரா-விக்னேஷ் சிவன்” திருமணம் - நெட்ஃப்ளிக்ஸ் அறிவிப்பு
Published on: 

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தின் ஒளிபரப்பு டாக்குமெண்டரியாக வெளியாக இருப்பதாக ஒளிபரப்பு உரிமம் பெற்ற நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி சென்னையில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஏஆர்.ரகுமான், அனிருத், மணிரத்னம், அட்லி எனப் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை பெற்ற நெட்ஃப்ளிக்ஸ், மொத்த திருமண நிகழ்வையும் பதிவு செய்திருக்கிறது. ஒரு டாகுமெண்டரி ஸ்டைலில் தங்களது திருமணம், காதல் பற்றி நயன்தாரா, விக்னேஷ் பகிர்ந்து கொள்வது, திருமணத்திற்கு வரும் சில விருந்தினர்கள் பேசுவது எனப் பல விஷயங்களை உள்ளடக்கி இந்த வீடியோ தயாராகியுள்ளது. 'Nayantara: Beyond the Fairytale' எனப் பெயரிடப்பட்டுள்ள நிகழ்வை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இது விரைவில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. தற்போது இதற்கான டீசரை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com