மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை தோலுரிக்கும் "மூக்குத்தி அம்மன்"- சீமான் பாராட்டு

மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை தோலுரிக்கும் "மூக்குத்தி அம்மன்"- சீமான் பாராட்டு

மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை தோலுரிக்கும் "மூக்குத்தி அம்மன்"- சீமான் பாராட்டு
Published on

மதத்தைக் கொண்டு மக்களை பிரித்து வாக்குவேட்டையாட முற்படும் அரசியல் நாடகங்களை தோலுரித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் கண்டு வெகுவாக ரசித்தேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ;lவிட்டர் பதிவில் “மதத்தின் பெயரால் சமகாலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தைக் கொண்டு மக்களை பிரித்து வாக்குவேட்டையாட முற்படும் அரசியல் நாடகங்களையும் தோலுரிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் கண்டு வெகுவாக ரசித்தேன்.

மக்களை விழிப்பூட்டி எழச்செய்யும் வகையில் சமூகக்கருத்துக்களை நகைச்சுவையோடு தந்திருக்கிற இயக்குநர்கள் தம்பி ஆர்.ஜே.பாலாஜி, தம்பி என்.ஜே. சரவணன் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com