'மைக்கேல் மதன காமராஜன்’ ஒரு மாஸ்டர் க்ளாஸ்: ’பிரேமம்’ இயக்குநர் கேள்விக்கு பதிலளித்த கமல்

'மைக்கேல் மதன காமராஜன்’ ஒரு மாஸ்டர் க்ளாஸ்: ’பிரேமம்’ இயக்குநர் கேள்விக்கு பதிலளித்த கமல்
'மைக்கேல் மதன காமராஜன்’ ஒரு மாஸ்டர் க்ளாஸ்: ’பிரேமம்’ இயக்குநர் கேள்விக்கு பதிலளித்த கமல்

’மைக்கேல் மதன காமராஜன் டிகிரி கோர்ஸ் போன்றது. அப்படத்தை எப்படி படமாக்கினீர்கள்?” என்று ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கேட்ட கேள்விக்கு கமல்ஹாசன் தற்போது பதிலளித்துள்ளார்.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரங்களில் நடித்த ‘தசாவதாரம்’ வெளியாகி 13 வருடங்கள் ஆனதையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், ‘நேரம்’, ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் “படம் இயக்குவதில் ‘தசாவதாரம்’ பிஹெச்டி போன்றது என்றால், ‘மைக்கேல் மதன காமராஜன்’ டிகிரி கோர்ஸ் போன்றது. மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காட்சிகளை எப்படி எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு, இன்று பதிலளித்துள்ள கமல்ஹாசன், ”நன்றி அல்ஃபோன்ஸ் புத்திரன். சீக்கிரம் சொல்கிறேன். உங்களுக்கு எந்த அளவுக்கு கற்றுக்கொள்ள உதவும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் சொன்ன மாதிரி அது ஒரு மாஸ்டர் கிளாஸ். படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்தும் இதுகுறித்துப் பேசுவது எனக்கு புதிய பாடங்களை கற்றுக்கொடுக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தை சங்கீதம் சீனிவாச ராவ் இயக்க கமல்ஹாசனும் கிரேசி மோகனும் திரைக்கதை அமைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும், எப்போதும் பலரின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com