மீடூ பரப்புரைக்கு ஆதரவாக பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கானும், அவரது மனைவி கிரண் ராவும் புதிய படத்தில் இருந்து விலகியுள்ளனர்.
பிரபல இயக்குநர் சுபாஷ் கபூர், குல்ஷன் குமார் சுயசரிதை படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஆமிர்கான் தயாரிப்பாளராக இணைந்திருந்தார். இந்நிலையில் சுபாஷ் கபூரின் மீது மீடூ ஹேஷ்டாகில் பாலியல் புகார்கள் குவியத்தொடங்கியதால், பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில் திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்கும் வகையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருடன் இணைந்து படம் தயாரிக்க முடியாது என்று ஆமிர்கான் தெரிவித்துள்ளார். அந்த படத்தின் தயாரிப்பில் இருந்து விலகுவதாகவும் ஆமிர்கான் அறிவித்துள்ளார்.