\
பாரிஸில் தொடங்கியது விஜய்சேதுபதியின் ஜுங்கா

பாரிஸில் தொடங்கியது விஜய்சேதுபதியின் ஜுங்கா

பாரிஸில் தொடங்கியது விஜய்சேதுபதியின் ஜுங்கா
Published on

’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி இணையும் படம், ’ஜுங்கா’. இதில் ’வனமகன்’ சாயிஷா சேஹைல் ஹீரோயின். யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். விஜய்சேதுபதி தயாரிக்கும் இந்தப் படத்தை, அருண்பாண்டியனின் ஏ & பி குரூப் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப்படத்துக்கான 30 நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல் பாரிஸ் நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

‘நான்கு வருடத்துக்கு முன், ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் இதே நாளில்தான் ரிலீஸ் ஆனது. அதே நாளில் ’ஜுங்கா’ படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. விஜய் சேதுபதி நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. சுமார் 30 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கும். பிறகு சென்னையில் படப்பிடிப்பு தொடரும்’ என்று படக்குழு கூறியது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com