சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம், 'ஜெயிக்கிற குதிர'. ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், யோகி பாபு, டி.பி.கஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆஞ்சி. இசை, கே.ஆர்.கவின் சிவா. ஷக்தி என்.சிதம்பரம் எழுதி இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ’இன்று இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த காமெடி, காதல், கொஞ்சம் கிளாமர் போன்ற அம்சங்கள் இதில் இருக்கும். பக்கா கமர்சியல் படம். படம் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை காமெடி கலாட்டாவாக இருக்கும். படத்தை சென்சார் குழு, ஏ சான்றிதழ வழங்கியுள்ளது. விரைவில் படம் ரிலீஸ் ஆகிறது’ என்றார்.