\
பாலியல் தொல்லைக் கொடுத்தேனா? இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மறுப்பு

பாலியல் தொல்லைக் கொடுத்தேனா? இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மறுப்பு

பாலியல் தொல்லைக் கொடுத்தேனா? இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மறுப்பு
Published on: 

தன் மீது உதவி இயக்குனர் கொடுத்த பாலியல் புகாரை மறுத்துள்ளார், பிரபல இந்திப் பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.

பிரபல இந்திப் பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. இவர் இயக்கிய முன்னாபாய் எம்.பி.பிஎஸ், லகே ரகோ முன்னா பாய், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின. இதில் முன்னா பாய் படம், தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில். 3 இடியட்ஸ், நண்பன் என்ற பெயரிலும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. மாதவன் நடிப்பில் தமிழில் வெளியான ’இறுதிச் சுற்று’ப் படத்தின் இந்தி பதிப்பை, ’சாலா கடூஸ்’ என்ற பெயரில் இவர் தயாரித்திருந்தார். 

சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதையான ’சஞ்சு’ படத்தை இவர் இயக்கியபோது, உதவி இயக்குனராக பணியாற்றிய இளம் பெண் ஒருவர் ஹிரானி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அதில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை பலமுறை தன்னை பாலியல் ரீதியாக ஹிரானி பயன்படுத்திக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இது இந்தி திரையுலகில் பரபரப்பானது.

’’இந்த குற்றச்சாட்டு பொய்யானது, தீய எண்ணத்தில் சொல்லப்பட்டது. எனது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இந்தக் கதை புனையப்பட்டு ள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார்.

2 மாதத்துக்கு முன்பே, இந்த புகாரை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அதை சட்டரீதியான குழுவுக்கு அனுப்புமாறு கூறியதை கேட் காமல் அவர் மீடியாவுக்கு ஊடகங்களுக்கு சென்றுள்ளதாகவும் ஹிரானி தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com