”இளையராஜா சாருடன் பணிபுரிய நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன்” - நடிகர் விஷால்

”இளையராஜா சாருடன் பணிபுரிய நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன்” - நடிகர் விஷால்
”இளையராஜா சாருடன் பணிபுரிய நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன்” - நடிகர் விஷால்

”உங்களுடன் பணிபுரிய நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். ஊரடங்கு முடிந்தவுடன் ’துப்பறிவாளன் 2’ படத்தை முடித்து உங்களிடம் காட்ட காத்திருக்கிறேன்” என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார், நடிகர் விஷால்.

விஷால் தயாரித்து நடித்த துப்பறிவாளன் வெற்றியடைந்ததை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் ’துப்பறிவாளன் 2’ தயாராகி வருகிறது. இந்தப் படத்தை முதலில் மிஷ்கின் இயக்கி வந்தார். விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,  ’துப்பறிவாளன் 2’  விஷால் இயக்குவது என முடிவானது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

லண்டனில் நடைப்பெற்ற படப்பிடிப்பு தற்போது ஊரடங்கால் தடைப்பட்டு நிற்கிறது. இந்நிலையில், நடிகர் விஷால் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியிருப்பதோடு, அவருடன் பணியாற்றும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உங்களுடன் பணிபுரிய  நீண்ட காலமாக காத்திருக்கிறேன். ஊரடங்கு முடிந்தவுடன்  ’துப்பறிவாளன் 2’ ஷூட்டிகை முடித்துவிட்டு உங்களிடம் படத்தை காட்ட காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com