”தாமதமாக தெரிந்து கொண்டேன்; அஜித்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்” - விவேக் ட்வீட்

”தாமதமாக தெரிந்து கொண்டேன்; அஜித்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்” - விவேக் ட்வீட்

”தாமதமாக தெரிந்து கொண்டேன்; அஜித்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்” - விவேக் ட்வீட்
Published on

46-வது தமிழ்நாடு மாநில ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை ரைபிள் கிளப் சார்பில் பங்கேற்ற அஜித் மொத்தமாக ஆறு பதக்கங்களை வென்றதற்கு நடிகர் விவேக் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

நடிப்பையும் கடந்து கார் ரேஸிங், பைக் ரேஸிங், சைக்கிளிங், சிறிய ரக டிரான் பறக்க விடுவது என கலவையாக பலவித விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். துப்பாக்கிச் சுடுதலில் 6 பதக்கங்களை வென்றதற்கு பல தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர் “துணை முதல்வர், சீமான், காங்கிரஸ், பாஜக, திமுக பிரமுகர்கள் மற்றும் பல திரைப்பட நடிகர்கள் தல அஜித் துப்பாக்கி சுடுதலில் 6 தங்கம் வென்று சாதனை படைத்ததற்கு பாராட்டி பதிவு செய்கிறார்கள், அஜித் உங்கள் நண்பர் நீங்கள் ஏன் பதிவிடவில்லை சார்?” என்று எழுப்பிய கேள்விக்கு விவேக்

“நான் வட இந்தியாவில் படபிடிப்பில் உள்ளேன். தாமதமாக தெரிந்து கொண்டேன். அஜீத் எப்போதும் வித்தியாசமானவர் தான். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com