நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 'விக்ரம்' படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா நடைபெறுகிறது. இதற்கு காரணம் நான் மட்டும் அல்ல நீங்களும்தான். இன்னும் பல வேலைகள் உள்ளன. சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்ததே. நான் முழு நேர நடிகன் கிடையாது. சில நேரம் நடிக்காமல் இருந்ததால் பல இன்னல்களை சந்தித்துள்ளேன். விழுந்தாலும் எழுந்துவிடுவார் என்று கூறுவார்கள். எழுப்பிவிட்டது நீங்கள்தான்! இந்த அரசியல் களத்தில் மாற்றத்தை நாம் இணைந்து ஏற்படுத்த வேண்டும்
இந்தியாவின் அழகே பன்முகத் தன்மைதான். எல்லோரும் கைகோர்த்தால்தான் இந்தியா. என் வேலை இன்னொரு மொழி ஒழிக என்பதல்ல. தமிழ் வாழ்க என்பதே! அதற்கு யார் எதிராக நின்றாலும், எதிர்க்க வேண்டியது என் கடமை. இந்தி, குஜராத்தி கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தாய் மொழியை விட்டுக் கொடுக்காதீர்கள்” என்று பேசினார்.
இதையும் படிக்கலாமே: வருடத்திற்கு ஒரு படமாவது நடிங்க! கமலிடம் உதயநிதி கோரிக்கை!