\
"இதோ...  நான் ரெடி"- பாகுபலி நடிகரின் மகிழ்ச்சிப் பதிவு

"இதோ... நான் ரெடி"- பாகுபலி நடிகரின் மகிழ்ச்சிப் பதிவு

"இதோ... நான் ரெடி"- பாகுபலி நடிகரின் மகிழ்ச்சிப் பதிவு
Published on

தெலுங்குப் படவுலகின் பிரபல நடிகர் பாகுபலி ஹீரோ ராணா டகுபதிக்கு இன்று திருமணம். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே குர்தா மற்றும் பாரம்பரிய வேஷ்டியுன் உள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "ரெடி" என்றும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். தற்போது தன் தந்தை சுரேஷ் மற்றும் நடிகர் வெங்கடேஷுடன் இரட்டை விரலைக் காட்டியபடி நிற்கும் மகிழ்ச்சியான படத்தை ராணா வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

ராணா டகுபதிக்கும் தொழிலதிபர் மிகிஹா பஜாஜூக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று திருமணம் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பான குடும்பச் சடங்குகளில் அவர்கள் பங்கேற்று வருகின்றனர். தெலுங்கு மற்றும் மராத்தி முறைப்படி திருமணச் சடங்கு நடத்தப்படும் என இருவீட்டாரும் அறிவித்துள்ளனர்.

"இந்த திருமணத்தில் முப்பது பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள். எங்களுடைய கொண்டாட்டங்களின் மூலம் உறவினர்களுக்கு ரிஸ்க் ஏற்படுத்த விரும்பவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருகும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்" என ராணாவின் தந்தை சுரேஷ் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com