\
"காலாவுக்கு நல்ல வரவேற்பு" - ரஜினி

"காலாவுக்கு நல்ல வரவேற்பு" - ரஜினி

"காலாவுக்கு நல்ல வரவேற்பு" - ரஜினி
Published on

காலா திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் காலா. ரஞ்சித் இயக்கியிருக்கும் அப்படத்தில் ரஜினி மும்பை தாராவியில் மக்களுக்காக போராடும் ஒருவராக நடித்திருந்தார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சென்றுள்ள ரஜினிகாந்த்தை, அந்த மாநில சுற்றுலாத்துறைஅமைச்சர் கவுதம் தேப் சந்தித்துப் பேசினார். 

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காலா திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் படத்திற்கு எதிர்ப்பு இருப்பதாக தெரிகிறதே? என்ற கேள்விக்கு,  இல்லை. படம் வெளியாகிவிட்டது. அரசுகளின் ஒத்துழைப்பினால் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com