’புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம்' - ஜி.வி பிரகாஷ்

’புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம்' - ஜி.வி பிரகாஷ்

’புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம்' - ஜி.வி பிரகாஷ்
Published on

நாடு முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிவரும் நிலையில் நடிகர் ஜி.வி பிரகாஷ் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுகு மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இதற்கு பிரபலங்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவுக் குரல்களும் ஒலித்துவரும் நிலையில், நடிகர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. அரசு மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம். மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகம். அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இயக்குநர் வெற்றிமாறன் “ தங்களது குரலுக்கு செவிசாய்க்கப்படாததன் வெளிப்பாடுதான் மக்களின் போராட்டம். ஆளும் அரசாங்கத்தின் அதிகாரம் மக்களால் வழங்கப்பட்டது. இது மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். மாறாக கார்ப்ரேட்டின் நலனை சார்ந்து இருக்கக் கூடாது. விவசாயிகள்  தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் உரிமைக்காக போராடுவதும், போராட்டத்திற்கு துணை நிற்பதுமே ஜனநாயகம்.” என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com