"உடலை வைத்து காமெடி செய்தால் எடுபடாது" - நடிகை வித்யூலேகா
விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகை வித்யூலேகா, 'நீதானே என் பொன் வசந்தம்' என்ற படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்குப் படவுலகில் பிரபல நகைச்சுவை நடிகையாக வலம்வருகிறார். 'இந்து தமிழ் ' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "உடலை வைத்து நகைச்சுவை செய்தால் ரசிகர்கள் நிராகரித்துவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உடல் பருமனை வைத்து சினிமாவில் கிண்டல் செய்வதை நகைச்சுவை என்று இன்னமும் நம்புகிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள வித்யூலேகா, "தமிழ் சினிமா என்றல்ல, இந்தியாவின் பல மாநில சினிமாக்களிலும் இருக்கும் எழுத்து வறட்சியால் ஏற்பட்ட அவலம். மனித உடலையும் தோற்றத்தையும் வைத்து கிண்டல் செய்யும் நகைச்சுவை நீண்டகாலம் ஈடுபடாது" எனறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது நகைச்சுவையின் நவீனகாலப் பரிமாணங்கள் தொலைக்காட்சி, ஓ.டி.டி. ஒரிஜினல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன. வாழ்க்கையில் இருந்து நகைச்சுவையை எடுத்து கையாள்வதால் அங்கே இன்று ஏராளமான ஸ்டார்கள் தோன்றிவிட்டார்கள்" என்றும் வித்யூலேகா கூறியுள்ளார்.