’நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடணும்’ - எஸ்.பி.பிக்காக நடிகர் சூரி பிரார்த்தனை

’நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடணும்’ - எஸ்.பி.பிக்காக நடிகர் சூரி பிரார்த்தனை

’நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடணும்’ - எஸ்.பி.பிக்காக நடிகர் சூரி பிரார்த்தனை
Published on

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு பல பிரபலங்கள் விரைவில் குணம் பெற்றுவர வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் செய்துவருகின்றனர். அந்த வரிசையில் அவர் விரைவில் குணம் பெற்றுவர நகைச்சுவை நடிகர் சூரி தனது வாழ்த்துதல்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’எஸ்.பி.பி சார், விவரம் தெரிஞ்சு உங்க குரல் கேட்காம நாங்க ஒருநாள் கூட கடந்ததில்ல!!! விடியக்கால நடந்தாலும் சரி, வீட்ல விசேஷம்னாலும் சரி, தாலாட்டி எங்கள தூங்க வைக்கிறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி, எப்பவுமே உங்க பாட்டுத்தான்!!!

எப்பவும்போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காகப் பாடணும் - உங்க குரல கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்கை ஓடனும்ன்னு... ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன் சார்’’ என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் எஸ்.பி.பிக்கு பிரபலங்கள் உட்பட பலரும் இதுபோன்ற வாழ்த்துதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com