\
“பயமின்றி துணிந்து செல்லு..” - அசத்தும் பிகிலின் 'சிங்கப்பெண்ணே' பாடல்!

“பயமின்றி துணிந்து செல்லு..” - அசத்தும் பிகிலின் 'சிங்கப்பெண்ணே' பாடல்!

“பயமின்றி துணிந்து செல்லு..” - அசத்தும் பிகிலின் 'சிங்கப்பெண்ணே' பாடல்!
Published on

பிகில் படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடலின் லிரிகல் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முழுவதுமாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது. 

‘பிகில்’ படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியாகின.

இதற்கிடையே பிகில் படத்தின் 'சிங்கப்பெண்ணே' எனத் தொடங்கும் பாடல் சமூக வலைதளங்களில் கசிந்தது. பின்னர், 'சிங்கப்பெண்ணே' பாடல் 23ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்நிலையில், பிகில் படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடலின் லிரிகல் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த லிரிகல் வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவது போல் உள்ளது. பாடல் வரிகள் பெண்களை போற்றும் வகையிலும், அவர்களை வெற்றி நோக்கி பயணிக்கு ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளன.

'சிங்கப்பெண்ணே' பாடல் வெளியானதை அடுத்து #Singappenney என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சிங்கப்பெண்ணே பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com