பிக்பாஸ் ஜூலி தன் காதலர் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2017ம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் பெரிய புகழை சம்பாதித்தவர் ஜூலி. அந்த அடையாளம் தான் அவரை ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றுக்கு கொண்டு போனது. ஆனால் அவருக்கு ஜல்லிக்கட்டில் கிடைத்த நல்ல பெயர் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கவில்லை. அவர் எதிர்மறையாகவே மக்களால் பார்க்கப்பட்டார். அதனையும் அவர் மிக இயல்பாக எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆரவ்- ஓவியா இடையே காதல் மலர்ந்தது. அப்போது காதல் சம்பந்தமான விவாதம் எழும் போது ‘காதல் கல்யாணம் செய்ய மாட்டேன். வீட்டில் பார்க்கும் பையனைதான் மணம் புரிவேன்’ என்று ஜூலி கூறியிருந்தார்.
ஆனால் இப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நெருங்கி நண்பரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இவர் ஜூலியின் காதலர் என கூறப்படுகிறது. இவர் பிஎம்டபுள்யூ காரை ஓட்டுவதைபோல ஒரு படத்தை வெளியிட்டு ‘ஒரு நெடிய பயணம் என் நெருங்கி நண்பர் மார்க் ஹம்ரனுடன்’ என்று கூறியிருந்தார்.
மேலும் அந்தமான் Havelock Islandல் நெருங்கி நண்பருடன் ஸ்கூபா டைவ் செய்ததாகவும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனை அடுத்து “என் பிறந்த நாளைக்கு வாழ்த்திய அழகான இதயங்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பான நன்றி உங்கள் ஆசிர்வாதத்திற்கும் நன்றி. மிக தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும். அந்தமான் தீவிற்குள் நெருங்கி நண்பர் மார்க் ஹம்ரனுடன் சென்றதில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மார்க் ஒரு சென்னை மாடல் என்று தெரிகிறது. இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாக செய்தி பரவி வருகிறது.