பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி மரணம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி மரணம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி மரணம்!
Published on

பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி, உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 52.

பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி (Luke Perry). 8 செகண்ட்ஸ், அமெரிக்கன் ஸ்ட்ரேஸ், த ஹீஸ்ட், ஸ்டோம், பைனல் ஸ்டோம், ரெட் விங் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், ஏராளமான டிவி தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இவர் நடிப்பில் வெளியான, ’பேவர்லி ஹில்ஸ் 90210’ (Beverly Hills, 90210) என்ற டிவி தொடர் பிரபலமான ஒன்று. இப்போது, லியானார்டோ டிகாப்பிரியோ, பிராட் பிட் ஆகியோருடன் ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த பெர்ரி, கடந்த மாதம் 27 ஆம் தேதி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக மருத்துவமனையில் சேர்க் கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.

மறைந்த பெர்ரி, ராச்சல் மின்னி என்பவரை 1993 ஆண்டு திருமணம் செய்தார். 2003 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com