‘பாகுபலி2’ ஜப்பானில் 100 நாளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாகுபலி2’. இந்தப் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகம் வெளியானது. அதில் பிரபாஸ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் 2017ஆம் ஆண்டு உலக அளவில் மாபெரும் சாதனை படைத்தது. இந்திய சினிமா ஒன்று உலக அளவில் ஈட்டிய வசூல் ரெக்கார்ட் பிரேக் ஆனது. உலக அளவில் இப்படத்தின் வசூல் 1700 கோடியை எட்டியது. குளோபல் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இடம் பிடித்தது. இந்நிலையில் டிசம்பர் 29ஆம் தேதி திரையிடப்பட்ட ‘பாகுபலி2’ ஜப்பானில் நூறுநாள் ஓடி சாதனை படைத்துள்ளது. 15 வார வசூலாக அமெரிக்க டாலர் மதிப்பில் 1.3 மில்லியனை சம்பாதித்துள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினர் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.