அமெரிக்காவில் இன்று வெளியாகி இருக்கும் ‘கான்ஜூரின்’ திரைப்பட வரிசையின் அடுத்த பாகமான ‘அன்னபெல்’ இவ்வார இறுதியில் சுமார் 200 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.
இதற்கு அடுத்த இடத்தை கிறிஸ்டோபர் நோலனின் ‘டன்கிர்க்’ திரைப்படம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கிறது. இதன்மூலம் இரண்டாம் இடத்தில் இருந்த ‘கேர்ள்ஸ் ட்ரிப்’ திரைப்படம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும்.