\
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது மாஸ்டர், கைதி பட நடிகர் அர்ஜூன் தாஸின் 'அந்தகாரம்'

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது மாஸ்டர், கைதி பட நடிகர் அர்ஜூன் தாஸின் 'அந்தகாரம்'

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது மாஸ்டர், கைதி பட நடிகர் அர்ஜூன் தாஸின் 'அந்தகாரம்'
Published on

’கைதி’ படத்தில் வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் அவரது அசாத்திய நடிப்புக்கும், தனித்துவமான குரலுக்கும் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார். லோகேஷ் கனகராஜின் ’மாஸ்டர்’ படத்திலும் இளைய தளபதியுடன் நடித்துள்ளார்.

அட்லி தயாரிப்பில் உருவாயிருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘அந்தகாரம்’ நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் வினோத், பூஜா, மீஷா கோஷல் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு அந்தகாரம் படத்தின் டிரைலர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் இந்த மாத இறுதியில் நேரடி ஓடிடி வெளியீடாக வர இருக்கிறது. விக்னராஜன், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com