\
’திருமணநாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய அல்லு அர்ஜுன்’ - க்யூட் போட்டோஸ்!

’திருமணநாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய அல்லு அர்ஜுன்’ - க்யூட் போட்டோஸ்!

’திருமணநாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய அல்லு அர்ஜுன்’ - க்யூட் போட்டோஸ்!
Published on: 

நடிகர் அல்லு அர்ஜுன் தனது திருமண நாளை முன்னிட்டு தாஜ்மஹாலில் மனைவியுடன்  கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் ’ஸ்டைலிஷ்’ நடிகர் அல்லு அர்ஜுன், ஸ்னேகா ரெட்டியை கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில்தான் திருமணம் செய்துகொண்டார். ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக்கொண்டபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்த ஜோடிக்கு அல்லு அயன், அல்லு அர்ஹா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர.

திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆனாலும், அதே காதலோடு இருக்கிறார்கள் என்பதற்கு சமூக வலைதளங்களில் இவர்கள் உற்சாகமுடன் அடிக்கடி பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்களே சாட்சி.

இந்நிலையில், இன்று பத்தாம் ஆண்டு திருமண நாளையொட்டி அல்லு அர்ஜுன் மனைவி ஸ்னேகா ரெட்டியுடன் காதலின் பேரதிசயம் தாஜ்மஹாலுக்குச் சென்று காதலை சிறப்பித்துள்ளார்.

வெள்ளை நிற தாஜ்மஹால் முன்பு அன்பின் நிறமான வெள்ளை உடையில் அல்லு அர்ஜுனும் ஸ்னேகா ரெட்டியும் நின்று எடுத்துள்ளப் புகைப்படம் இதயங்களை கொள்ளைக் கொள்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com