\
அமலாபாலின் 'அச்சுக்கு புச்சு'க்கு பாடல் வெளியானது

அமலாபாலின் 'அச்சுக்கு புச்சு'க்கு பாடல் வெளியானது

அமலாபாலின் 'அச்சுக்கு புச்சு'க்கு பாடல் வெளியானது
Published on

அமலாபால் நடித்துள்ள திருட்டுப்பயலே-2 படத்தின் அச்சுக்கு புச்சுக்கு வீடியோ பாடல் யு-டியூப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

விரும்புகிறேன், பைவ்ஸ்டார், கந்தசாமி, திருட்டுப்பயலே படங்களைத் தொடர்ந்து சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருட்டுப்பயலே-2. இதில் பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அச்சுக்கு புச்சுக்கு பாடல் இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. 


அமலா பால் நடித்துள்ள இந்தப்படலின் வீடியோ காட்சியை ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன்  பார்த்து ரசித்து வருகின்றனர். இந்தப் பாடலுக்கு ஸ்மைலி சாங் எனப்பெயர் சூட்டியுள்ளனர். திருட்டுப்பயலே-2 படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com