‘96’ படத்தை அதற்குள் டிவியில் வெளியிடுவதா?  - த்ரிஷா வருத்தம்

‘96’ படத்தை அதற்குள் டிவியில் வெளியிடுவதா? - த்ரிஷா வருத்தம்

‘96’ படத்தை அதற்குள் டிவியில் வெளியிடுவதா? - த்ரிஷா வருத்தம்
Published on

‘96’ திரைப்படத்தை இவ்வளவு சீக்கிரம் தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என அப்படத்தின் நாயகி த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சி.பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘96’. இப்படம் பலருடைய பள்ளிப் பருவ காதலை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதால் அதனை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், இப்படத்தின் உரிமையை பெற்றுள்ள தனியார் தொலைக்காட்சி தீபாவளி அன்று மாலை 6.30 மணிக்கு ‘96’ திரைப்படம் ஒளிபரப்பாகும் என விளம்பரப்படுத்தி வருகிறது.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, ‘96’ திரைப்படத்தை இவ்வளவு சீக்கிரம் தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என தங்கள் படக்குழு கருதுவதாகவும் படம் வெளியாகி 5 வாரங்கள் ஆகியும் அனைத்து திரையரங்குகளிலும் இன்னும் 80 % வரை இருக்கைகள் நிறைந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தயவு செய்து இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பை பொங்களுக்கு தள்ளிவைத்தால் நன்றியுடன் இருப்பேன் எனவும் த்ரிஷா கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com