\
‘அதர்வா -சாம் ஆண்டன்’ மீண்டும் இணையும் '100' படத்தின் கூட்டணி!

‘அதர்வா -சாம் ஆண்டன்’ மீண்டும் இணையும் '100' படத்தின் கூட்டணி!

‘அதர்வா -சாம் ஆண்டன்’ மீண்டும் இணையும் '100' படத்தின் கூட்டணி!
Published on: 

100' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அதர்வா மற்றும் இயக்குநர் சாம் ஆண்டன் ஆகியோர் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வெளியான '100' திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றியடைந்தது. இந்த நிலையில் புதிய கதை ஒன்றை எழுதிய சாம் ஆண்டன், அதை நடிகர் அதர்வாவிடம் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார்.

மேலும் கதை விவாதப் பணிகளை முடித்துள்ள இயக்குநர், நடிகர்கள் தேர்வை நடத்தி வருகிறார். அந்த வேலைகள் முடிவடைந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதர்வா - சாம் ஆண்டன் கூட்டணியில் வெளியான '100' படம் வெற்றியடைந்ததால், அவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com