கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது: விஷாலை விளாசும் வரலட்சுமி

கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது: விஷாலை விளாசும் வரலட்சுமி

கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது: விஷாலை விளாசும் வரலட்சுமி
Published on

நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் மீது, புகார் தெரிவித்ததற்காக, நடிகர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் நடிகை வரலட்சுமி.

நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. இதில் நடிகர் நாசர் தலையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் வெளியிடப்பட்ட பிரசார வீடியோவில், சரத்குமார், ராதாரவியால் நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, நடிகர் விஷாலுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் வெளியான தேர்தல் பிரசார வீடியோவில், நீங்கள் எவ்வளவு தாழ்ந்து போய்விட்டீர்கள் என்பதை நினைத்து வருத்தம் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் இப்போது போய்விட்டது. என் தந்தையின் மீது கூறியுள்ள புகாரை நினைத்து வருந்துகிறேன். சட்டம்தான் உயர்ந்தது என்று அடிக்கடி சொல்வீர்கள். குற்றம் நிரூபிக்கப்படாதவரை, எந்த மனிதனும் நிரபராதிதான். என் தந்தை தவறு செய்திருந்தால் இப்போது தண்டனை அனுபவித்திருப்பார். அதனால் உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். 

இதுபோன்ற கீழ்த்தரமான வீடியோ, உங்கள் மோசமான தரத்தைக் காட்டுகிறது. அதற்கு உங்களை குற்றம் சொல்ல மாட்டேன். நீங்கள் வளர்ந்த விதம் அப்படி என யூகிக்கிறேன். சாதுபோல இனியும் உங்களை காட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் இரட்டை நிலையையும் பொய்களையும் எல்லோரும் அறிவார்கள் என நினைக்கிறேன். நீங்கள் சாதுவாக இருந்திருந்தால் உங்கள் அணியை சேர்ந்தவர்கள் ஏன், வேறு அணியை ஆரம்பித்திருக்க வேண்டும். உங்கள் சாதனையை சொல்லி பிரசாரம் செய்வதை விட்டுவிட்டு, தேர்தலில் போட்டியிடாத என் தந்தையை ஏன் இழுக்க வேண்டும்?

உங்களை மதித்து தோழியாக இதுவரை ஆதரவு அளித்து வந்தேன். இனி அதை தொடர மாட்டேன். என் வாக்கை இழந்துவிட்டீர்கள். நீங்கள் சொல்வது போல உண்மை வெல்லும் என்று நானும் நம்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com