\
விநாயகர் சதூர்த்திக்கு வெளியாகும்‘விசுவாசம்’ஃபர்ஸ்ட்லுக்?

விநாயகர் சதூர்த்திக்கு வெளியாகும்‘விசுவாசம்’ஃபர்ஸ்ட்லுக்?

விநாயகர் சதூர்த்திக்கு வெளியாகும்‘விசுவாசம்’ஃபர்ஸ்ட்லுக்?
Published on

அஜித்தின் ‘விசுவாசம்’ ஃபர்ஸ்ட்லுக் விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடித்து வரும் ஆக்‌ஷன் த்ரிலர் திரைப்படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தின் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டு சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பது குறித்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர். 

இந்நிலையில் ‘விசுவாசம்’ படத்தின் அஜித் ஃபர்ஸ்ட்லுக் வரும் செப்டம்பர் 13 அன்று விநாயகர்சதூர்த்தி அன்று வெளியாக உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. இன்னொரு தரப்பினர் ஆகஸ்ட் 31 அன்று ஃபர்ஸ்ட்லுக் வெளியாக உள்ளதாகவும் கூறி வருகின்றனர். எப்போது வெளியானாலும் அது அஜித் ரசிகர்களுக்கு அது விழாக்காலம்தான்.

இந்தப் படத்தில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் வயதான அஜித் தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர் தற்சமயம் அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் வயதான தோற்றத்தை எடுத்து வருவதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் மூலம் முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை இமான் பெற்றுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இதனை தயாரித்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com