“ஹோட்டல் ரூம் இல்லையா? ஒரு ஃபேன் கொடுங்க போதும்” - ‘விசுவாசம்’ அஜித் அப்டேட்

“ஹோட்டல் ரூம் இல்லையா? ஒரு ஃபேன் கொடுங்க போதும்” - ‘விசுவாசம்’ அஜித் அப்டேட்

“ஹோட்டல் ரூம் இல்லையா? ஒரு ஃபேன் கொடுங்க போதும்” - ‘விசுவாசம்’ அஜித் அப்டேட்
Published on

அஜித் ஒரு மனிதாபிமான உள்ள நடிகர். அதை அவர் வாய்ப்பு உள்ள போதெல்லாம் நிரூபித்து வருகிறார். 

அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக இயக்குநர் சிவா, ராஜமுந்திரியையும் ஹைதராபாத்தையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் படக்குழு முதலில் ராஜமுந்திரியில் சில பகுதிகளை எடுக்க திட்டமிட்டிருந்தது. திட்டமிட்டபடி ராஜமுந்திரி கிளம்புவதில் சில சிக்கல்கள் இருந்துள்ளன. அதனால் படக்குழு ராஜமுந்திரி காட்சிகளை ஹைதராபத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியிலேயே எடுக்க தீர்மானித்து எடுத்து வந்துள்ளனர். 

படப்பிடிப்பின் ப்ளான் மாறியது. ஆனால் அதற்கு தகுந்த மாதிரி அஜித்திற்காக ஹைதராபாத்தில் போடப்பட்ட ஹோட்டல் ரூம் தேதிகளை நீட்டிக்க முடியாமல் போய் உள்ளது. அஜித் தங்கி இருந்த அறையை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முன் பதிவு செய்துள்ளார். ஆகவே அஜித் அவரது அறையை காலி செய்ய வேண்டி வந்துள்ளது. அவரிடம் போய் பிரச்னையை கூறியிருக்கிறார்கள். அவர், “ஹோட்டல் ரூம் இல்லையா, அதனால் என்ன? ஆல் ரைட்.. ஒரு சின்ன ரூமும் கூடவே ஒரு ஃபேனும் கொடுங்க போதும்” என கூறியிருக்கிறார். அடுத்த நிமிடமே அறையை காலி செய்தும் கொடுத்திருக்கிறார். அதை கேள்விப்பட்ட படக்குழு அவரது பெருந்தன்மையை பற்றி பலமணிநேரம் பாராட்டி தள்ளியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com