இந்த வருஷம் ‘தளபதி’தீபாவளி; ‘தல’தீபாவளி இல்லை?

இந்த வருஷம் ‘தளபதி’தீபாவளி; ‘தல’தீபாவளி இல்லை?

இந்த வருஷம் ‘தளபதி’தீபாவளி; ‘தல’தீபாவளி இல்லை?
Published on

அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’படத்தின் வெளியீடு அடுத்த வருஷம் பொங்கலுக்கு தள்ளிப் போக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘விசுவாசம்’. இவரது இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து வருகிறார். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களை அடுத்து இவர் அஜித்தை வைத்து ‘விசுவாசம்’ படத்தை எடுத்து வருகிறார். இந்த நான்கு படங்களின் தலைப்பின் முதல் எழுத்தும் ஆங்கிலத்தில் ‘வி’என வருவதை போல இயக்குநர் திட்டமிட்டு வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அங்கே சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுவரை 40 சதவீத படப்பிடிப்பை முழுவதுமாக முடித்திருக்கிறது படக்குழு. இந்தப் படத்தின் பூஜையின் போதே ‘தீபாவளி ரிலீஸ்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ஆனால் இடையில் திரைத்துறை வேலை நிறுத்தத்தை கடைப்பிடித்ததால் மொத்த சினிமா துறையும் முடங்கியது. அதனால் திட்டமிட்டபட்டி ‘விசுவாசம்’ வேகம் எடுக்கவில்லை. 

இந்நிலையில் விஜய்யின் ‘சர்கார்’, சூர்யாவின் ‘என்ஜிகே’ திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. அதனால் அஜித்தின் ‘விசுவாசம்’ வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளிப் போடலாம் என படக்குழு திட்டமிட்டு வருவதாக செய்தி கசிந்து வருகிறது. ஆனால் இதனை  படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யவில்லை.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com