’மாஸ் மகாராஜா’வை காப்பாற்றுமா தெலுங்கு ’தெறி’?

’மாஸ் மகாராஜா’வை காப்பாற்றுமா தெலுங்கு ’தெறி’?

’மாஸ் மகாராஜா’வை காப்பாற்றுமா தெலுங்கு ’தெறி’?
Published on

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார். இது தமிழில் வெளியானபோதே, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. ஆனால், அங்கு எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். ரவி தேஜா ஹீரோவாக நடிக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் ’மாஸ் மகாராஜா’ என அழைக்கப்படும் ரவிதேஜாவுக்கு, கடந்த சில படங்கள் கைகொடுக்கவில்லை. இப்போது சீனு வைட்லா இயக்கும் ’அமர் அக்பர் அந்தோணி’ படத்தில் நடித்துவருகிறார். இதில் அவர் ஜோடியாக இலியானா நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு பிறகு அவர் ’தெறி’ ரீமேக்கில் நடிக்கிறார். தெலுங்குக்காக கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கிறார் ரவிதேஜா. அதாவது இன்னும் கொஞ்சம் மசாலா சேர்க்கப்படுகிறதாம் கதையில். அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ’ரங்கஸ்தலம்’ படத்தைத் தயாரித்த மைத்ரி மூவீஸ் தயாரிக்கிறார்கள். கேத்ரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com