‘சதுரங்கவேட்டை’ வினோத் இயக்கத்தில் அஜித்?

‘சதுரங்கவேட்டை’ வினோத் இயக்கத்தில் அஜித்?
‘சதுரங்கவேட்டை’ வினோத் இயக்கத்தில் அஜித்?

‘சதுரங்கவேட்டை’ இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத்திற்கு பெரிய வாய்ப்பு காத்திருப்பதாக தெரிகிறது. இவர் இயக்கிய இரண்டு படங்களுமே கதை ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை அடைந்தன. நல்ல இயக்குநர் என்ற பெயரையும் அவர் குறுகிய காலத்தில் அவர் எட்டியிருக்கிறார். இந்நிலையில் இவர் அஜித்தை சந்தித்து ஒரு கதையை கூறியிருப்பதாக தெரிகிறது. 

அக்கதையைக் கேட்ட அஜித்தும், கதை பிடித்துள்ளதாக பதிலளித்திருக்கிறார். ‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘விசுவாசம்’ படம் மே மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அந்தப் படம் முடிந்த உடன் அஜித், வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அஜித்தின் முறையான அறிவிப்பு கிடைக்கும் வரை அமைதியாக காத்து கொண்டிருக்கிறார் இளம் இயகுநர் வினோத். இந்தச் செய்தி பரவ ஆரம்பித்ததிலிருந்து அஜித்தின் ரசிகர்கள் உற்சாக உருமியை உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com