‘தளபதி63’ கார்ட் இயக்குநர் பேரரசு கையில்?

‘தளபதி63’ கார்ட் இயக்குநர் பேரரசு கையில்?

‘தளபதி63’ கார்ட் இயக்குநர் பேரரசு கையில்?
Published on

‘தளபதி63’ படத்தை இயக்குநர் பேரரசு இயக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது. 

‘மெர்சல்’ ப்ளாக்பாஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு விஜய், ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். மிகப் பிரம்மாண்டமான செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இதில் ‘பைரவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடியாக நடித்து வருகிறார். இதை அடுத்து விஜய்யின் ‘தளபதி63’ படத்தை இயக்குநர் பேரரசு இயக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. இவர் ஏற்கெனவே விஜய்க்கு ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’என மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர்.  ஒரு மாஸ் ஹீரோவாக விஜய்யை உயர்த்தி நிறுத்தியவர் இவர்.

ஆகவே இவரது இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்தச் செய்தியில் உண்மையில்லை என மறுத்துள்ளது விஜய்யின் நெருங்கிய வட்டம். மோகன் ராஜா, ஹெச். வினோத், அட்லீ, வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் ஏற்கெனவே விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாகவும் அதில் ஒன்றையே விஜய் தேர்ந்தெடுப்பார் என்றும் கூறப்படுக்கிறது. தனது அடுத்த படம் யாருடன் என்பதை ஜூலையில் விஜய்யே முறைப்படி அறிவிக்கவுள்ளதாகவும் அவரது வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com